இஸ்லாமிய மக்களுக்கு அரணாக காங். அரசு செயல்படுகிறது: ஜி.கே.வாசன்
நெல்லை: இஸ்லாமிய மக்களுக்கு அரணாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று நெல்லையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில் மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
நெல்லையில் ஐ.என்.டி.யூ.சி. சார்பில் குடும்ப விழா, இப்தார் நோன்பு திறப்பு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நேற்று மாலை நடந்தது. இப்தார் நோன்பு திறப்பு விழாவுக்கு உமாபதி சிவன் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை செயலாளர் ராஜேஷ், சுத்தமல்லி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேசியதாவது,
புனித ரமலான் மாதத்தில் இறைவனை மனதில் வேண்டி ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். மத நல்லிணக்க விழாவாக இப்தார் நோன்பு திறப்பு விழா அமைந்துள்ளது.
சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட அரசாக காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய மக்களுக்கு அரணாக, தூணாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. 2010-11-ம் ஆண்டு பட்ஜெட்டில் சிறுபான்மையின மக்களுக்கு ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் ஆகும்.
முன்னுரிமை கடன்கள் வழங்குவதில் 15 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்றார் அவர்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications