காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது-ஈவிகேஎஸ் இளங்கோவன்

இளங்கோவன் தொடர்ந்து தங்களை சாடி வந்ததால் கோபமடைந்த திமுக, காங்கிரஸுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து திமுக, திமுக ஆட்சி, முதல்வர் கருணாநிதி ஆகியோரை விமர்சிப்பதற்கு காங்கிரஸ் மேலிடம் தடை போட்டது.
இருப்பினும் வேறு மார்க்கமாக தொடர்ந்து பேசி வருகிறார் இளங்கோவன். சென்னை, மாதவரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஜி.கே. மூப்பனார் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் செங்குன்றத்தில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசுகையில், 4-வது முறையாக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது எதை காட்டுகிறது என்றால் இந்திய மக்களுக்காக உழைக்கும் அவரது தன்னலமற்ற தொண்டை காட்டுகிறது.
தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும் என்றால் இளைஞர் காங்கிரசார் பாடுபட வேண்டும். அதனால்தான் ராகுல்காந்தி இளைஞர்களை நம்பி களத்தில் இறங்கி உள்ளார். தமிழ் நாட்டில் காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது என்றார் அவர்.
இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications