திருச்சி சட்ட கல்லூரி மாணவர்கள் மோதல்-4 பேர் காயம்
திருச்சி: திருச்சி சட்ட கல்லூரியில் ராகிங் பிரச்சனை-யில் 2 -ம் ஆண்டு மாணவர்கள் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சட்டக் கல்லூரியில் 2 ம் ஆண்டு பயிலும் ரமேஷ், செந்தில், சக்தி, செல்வராஜ் ஆகிய நால்வர் கல்லூரி நூலகத்துக்குச் சென்ற போது, அங்கிருந்த 4 ம் ஆண்டு மாணவர்கள் 10 பேர் அவர்களை வழி மறித்து, சீனியர் மாணவர்களாகிய தங்களை கண்டவுடன் வணக்கம் செலுத்தாமல் செல்லக் கூடாது எனக் கூறி ராகிங் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்பு, 2 -ம் ஆண்டு மாணவர்களை 4 -ம் ஆண்டு மாணவர்கள் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படு காயமடைந்த மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில், ராகிங் தொடர்பாக 4- ம் ஆண்டு மாணவர்களிடம் திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications