ஆசிரியரைக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை, ரூ. 1000 அபராதம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு ஆசிரியரைக் கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு புத்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். அரசு பள்ளி ஆசிரியர். இவரது சகோதரிகள் ராஜம்மாள், சரோஜினி ஆகியோர் மூவோட்டுகோணம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
சரோஜினியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சாலமன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. பக்கத்து வீடு என்பதால் கேவலமாக உள்ளது என சரோஜனி தனது சகோதரர் தங்கராஜிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக தங்கராஜ் சாலமனைத் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 20.2.92 அன்று இரவு தங்கராஜ், அவரது சகோதரி ராஜம்மாள் இருவரும் கண்ணுமூடு சர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சாலமன் அரிவாளால் தங்கராஜை வெட்டினார். தடுத்த ராஜம்மாளுக்கும் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் சிகி்ச்சைக்கு பிறகு குணமடைந்தனர்.
களியக்காவிளை போலீசார் சாலமன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் வழக்கு பளுகல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த குழித்துறை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீர் அகமது, சாலமனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications