50 நோயாளிகளை காவு வாங்கிய ராஜஸ்தான் டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் 50 நோயாளிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்தப் பேரிழப்புக்குப் பின்னர் இப்போது டாக்டர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாவட்டம் ஜோத்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்குள் சமீபத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அரசு மருத்துவர்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 5 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்களும் கடந்த சனிக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
4 நாட்கள் தொடர்ந்த இந்த வேலை நிறுத்தத்தால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் உரிய சிகிச்சை பெறமுடியாமல் தவித்தனர். மருத்துவர்களின் இந்த செயலால் சுமார் 50 நோயாளிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இந்நிலையில் நேற்று அரசு மருத்துவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து மருத்துவர்கள் நேற்று மாலை பணிக்குத் திரும்பினர்.
பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் இறந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications