ரம்ஜானையொட்டி காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு ரத்து
ஸ்ரீநகர் : ரம்ஜான் பண்டிகையையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர், அனந்தநாக், பிஜ்பெகரா மற்றும் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் மீது பொது மக்கள் கல்வீசி தாக்கினார்கள். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் பலர் பலியானார்கள்.
கலவரம் ஒருமாதமாக நீடித்ததால் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவ்வப் போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்தது. ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனந்தநாக், பிஜ்பெகரா நகரில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்றும் இந்தப் பகுதியில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
பத்காம் மாவட்டத்தில் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. கல்வீச்சில் குலாம் முகமது குரோ என்பவர் காயம் அடைந்தார். இது போல் சிறு சிறு சம்பவங்கள் நடைபெற்றன.
தற்போது நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் மாநிலம் முழுவதும் எங்கெல்லாம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்ததோ அங்கெல்லாம் அது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications