மைனர் மாணவி திருமணத்தை நிறுத்திய போலீஸ்: 3 ஆண்டுகள் கழித்து திருமணம்
நெல்லை: 18 வயது நிரம்பாத மைனர் மாணவியின் திருமணத்தை போலீசார் நிறுத்தினர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ராமையா பாண்டியன். ஓய்வு பெற்ற தலையாரி. இவரது மகள் சந்தன செல்வி. 10-ம் வகுப்பு படித்து வந்தாள். 6 மாதத்திற்கு முன் ராமையா பாண்டியன் இறந்து விட்டார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. இதைத் தொடர்ந்து சந்தன செல்வியை மாமன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி வெங்கராயன்புரத்தைச் சேர்ந்த நாராயணனின் மகன் அய்யப்பனுக்கும், சந்தன செல்விக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அய்யப்பன் சென்னையில் பாத்திரக் கடை வைத்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த 6-ம் தேதி நடப்பதாக இருந்தது.
இதற்கிடையே 18 வயது நிரம்பாமல் சந்தன செல்விக்கு திருமணம் செய்து வைக்கும் தகவல் போலீசுக்கு எட்டியது. திருமணத்துக்கு முதல் நாள் மணமகனையும், மணமகளையும் மற்றும் உறவினர்களையும் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் சந்தன செல்விக்கு 15 வயது தான் ஆகிறது என்பது தெரிந்தது. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து வைப்பதாகவும், தற்போது நிச்சயம் மட்டும் செய்து கொள்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சந்தன செல்வி தொடர்ந்து பள்ளிக்குச் செல்கிறாள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications