கரூரில் காணாமல் போகும் நிருபர்களின் வாகனங்கள்: யார் அந்த மர்மத் திருடர்கள்?
கரூர்: கரூரில் பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் டிவி செய்தியாளர்களின் வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போய் வருவது பத்திரிக்கையாளர் வட்டாரத்தில் டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் பிரபல தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பிரபல நாளிதழ்கள் நிருபர்கள், வார இதழ்கள் நிருபர்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர்.
நிருபர்கள் பணி நிமித்தமாக காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், கட்சி அலுவலங்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களுக்கு செய்தி சேகரிக்க செல்ல வேண்டி உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே நிருபர்கள் பயன்படுத்தும் இரண்டு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் குறி வைத்துத் திருடிச் சென்று விடுகின்றனர்.
ஆரம்பத்தில் தமிழகத்தின் நம்பர் சேனலின் நிருபரின் யமஹா வாகனம் திருட்டு போனது. பின்பு மலர் நாளிதழ் நிருபரின் வாகனம் காணாமல் போனது. அடுத்து மாலையில் வெளிவரும் முரசு நாளிதழ் நிருபரின் வாகனம் காணமல் போனது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் மனு ரசீது மட்டுமே வழங்கப்படுகின்றது தவிர முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதில்லை.
கடந்த சில மாதங்களாகவே கரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிக அளவு நடைபெறுகின்றது. இது குறித்து செய்தியாளர்கள் உண்மையான சம்பவத்தை மக்களுக்கு அம்பலப்படுத்தி வருவதால் போலீசார் பத்திரிக்கையாளர்கள் மீது ஏற்கனவே கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே இந்த குறி வைத்து சுடும் சம்பவங்களில் ஈடுபடுவோரை போலீஸார் கண்டும் காணாமலும் விட்டு விடுவதாக செய்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். போலீஸாரும் இதற்கு உடந்தையா என்றும் கோபமாக கேட்கிறார்கள்.












Click it and Unblock the Notifications