திருவண்ணாமலை விபத்தில் 9 பேர் பலியாக ரேஷன் அரிசி கடத்தல் கும்பலே காரணம்-ஜெ.
சென்னை: ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்ற லாரி, அரசுப் பேருந்துடன் மோதியதால்தான் திருவண்ணாமலை அருகே விபத்து ஏற்பட்டு 9 உயிர்கள் பலியாக காரணமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. ஆளும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான் இதில் ஈடுபடுகின்றனர். இது குறித்து, அனைத்துத் தரப்பினரும் குற்றம் சுமத்தியும், இதைத் தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை வேலூரில் இருந்து கடலூர் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்குச் சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்தன. இதில் 9 பேர் உடல் கருகி இறந்துள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்துக்குள்ளான லாரியில் 20 டன் ரேஷன் அரிசி, கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
நியாய விலைக் கடைகள் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக ரூ. 3,750 கோடி நடப்பாண்டில் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் 40 சதவீதம், அதாவது ரூ. 1,500 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் தி.மு.க.வினரால் கடத்தப்படுவதாகவும், இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 5 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெறுவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரேஷன் பொருள்களை கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், இது இப்போதும் ஏட்டளவிலேயே உள்ளது. ரேஷன் பொருள்கள் கடத்துவது என்பது மணல் கொள்ளை போன்று அன்றாடம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால், கடத்தப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தக் கடத்தலுக்கு துணை நிற்கும் தி.மு.க.வினருக்கு வரும் தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications