சென்னையில் புது மாப்பிள்ளையை விரட்டி வெட்டிக் கொலை செய்த கும்பல்
சென்னை: சென்னையில் புது மாப்பிள்ளையை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் படுகொலை செய்தது. கொலையான நபரின் தம்பி ஒருவரை வெட்டியதற்குப் பழிவாங்கும் வகையில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். இவருக்கு சமீபத்தில்தான் கல்யாணம் நடந்தது. மனைவி பெயர் பொன்வல்லி. பொன்வல்லியின் வீடு வியாசர்பாடியில் உள்ளது.
பொன்வல்லியின் தாயார் வீட்டில் கேஸ்சிலிண்டர் தீர்ந்து விட்டது. இதையடுத்து பொன்வல்லியின் அண்ணன் சண்முகம், தங்கை வீட்டில் இருந்த சிலிண்டரை எடுக்க வந்தார். பைக்கை முரளி கிருஷ்ணன் ஓட்ட, மைத்துனர் சண்முகம் பின்னால் சிலிண்டருடன் அமர்ந்து கொண்டார்.
பின்னர் வண்டி சென்றபோது திடீரென எட்டு பேர் கொண்ட கும்பல் அவர்களை மடக்கியது. பயந்து போன சண்முகம், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ஆனால் முரளிகிருஷ்ணன் மாட்டிக் கொண்டார்.
அவரை அந்தக் கும்பர் சரமாரியாக வெட்டியது. தப்பி ஓட முயன்றும் அவரால் முடியவில்லை. தனது வீட்டு வாசல்வரை ஓடி வந்து விழுந்து விட்டார். சத்தம் கேட்டு முரளிகிருஷ்ணனின் தந்தை சிட்டிபாபு, தாயார் அலமேலு ஆகியோர் ஓடி வந்த போது, தங்களது மகன் வெட்டப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
ஆனாலும் கொலைக் கும்பல் மிகவும் சாவகாசமாக வெட்டி விட்டு முரளிகிருஷ்ணன் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்ட பின்னரே அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
சில மாதங்களுக்கு முன்பு, முரளிகிருஷ்ணனின் தம்பி கோபி என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த டொமினிக் என்பவரை வெட்டித் தள்ளினார். இதற்குப் பழிவாங்கும் வகையில், முரளிகிருஷ்ணனை தீர்த்துக் கட்டியுள்ளது டொமினிக்கின் ஆதரவுக் கும்பல்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications