வெளிநாடுகளுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை ரத்து! - ஒபாமா

Subscribe to Oneindia Tamil

Barack Obama
வாஷிங்டன்: வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலை வழங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரி ஊக்க தொகை வழங்கப்படமாட்டாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஒஹியோ மாகாண கவர்னர் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலை வழங்குவதை தடை செய்து உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவை தொடர்ந்து அதிபர் ஒபாமாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கும் கம்பெனிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அதிபர் ஒபாமா பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் செயல்படும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் ரத்து செய்துவிட்டார்.

அதேபோல, வெளிநாட்டவர் அமெரிக்காவுக்கு வேலைக்கு வருவதைத் தவிர்ப்பதற்காகவே, அமெரிக்கா விசா கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளார்.

இந்த நிலையில்தான், வெளிநாட்டு நிறுவனங்களிடம் வேலை வாய்ப்புகளை ஒப்படைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு, பொருளாதார வீழ்ச்சிக் காலத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் வரி ஊக்கத்தொகையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+