விநாயகர் சதுர்த்தி-தமிழகம், புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் விநாயகர்சிலைகளை வைத்து மக்கள் பூஜை நடத்தி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினர். இதன் பொருட்டு தமிழகம் முழவதும் விநாயகர் சிலைகள் விற்பனை களை கட்டியிருந்தது. களிமண்ணால் ஆன சிலைகளை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமிழகத்தின் முக்கிய விநாயகர் கோவிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றன.
திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முக்குருணி விநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. விதம் விதமான பிரசாதங்களும் விநாயகருக்குப் படைக்கப்பட்டன.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அமெரிக்க வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் சூட்டப்பட்டு காட்சி அளித்தார் விநாயகர்.மேலும், 9 கிலோ தங்கத்தால் ஆன கவசமும் அணிவிக்கப்பட்டது.
27 வகை பொருட்களுடன் சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் நாளின்போது இவை அனைத்தும் கடல் மற்றும் ஏரி, குளங்களில் கரைக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications