தலித் பிரிவுகளிடையே கடும் மோதல்-10 பேர் காயம்
ராமநாதபுரம்: தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்காக வந்து கொண்டிருந்த தலித்களுக்கிடையே கடும் மோதல் மூண்டது. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் நேற்று குரு பூஜையாக பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு தலித் பிரிவினர் பரமக்குடியில் குவி்ந்தனர். இதனால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது பரமக்குடி பர்மா காலனிப் பகுதியில் புதிய தமிழகம் கட்சியினரும், இன்னொரு தலித் கட்சியினரும் வந்தனர். அந்த பகுதியில் தேவர் சமூகத்தினர் அதிகம் வசிப்பதால் அங்கு பட்டாசுகளை வெடிக்க போலீஸார் தடை விதித்திருந்தனர்.
ஆனால் இதுதொடர்பாக தலித் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு பிரிவினர் பட்டாசு வெடிப்போம் என்றனர், இன்னொரு தரப்போ வெடிக்க வேண்டாம் என கோரினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டு விட்டது.
இதில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வீடுகளைத் தாக்கத் தொடங்கினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர், அவர்களில் மூவர் குழந்தைகள் காயமடைந்தனர்.
மேலும், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், மூன்று கான்ஸ்டபிள்களுக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்து விரட்டினர். இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 மாவட்ட எஸ்.பிக்கள் தலைமையில், 1500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications