காஷ்மீரில் மீண்டும் பெரும் வன்முறை-காலவரையற்ற ஊரடங்கு அமல்

ரம்ஜான் பண்டிகையையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காஷ்மீரில் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. அப்போது பெரும் கலவரம் வெடித்தது.
அமைதியாக நடந்து வந்த ரம்ஜான் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், ஸ்ரீநகரில் பெரும் கலவரம் மூண்டது. பிரிவினைவாத தலைவர் மிர்வைஸ் உமர் பாருக் ஈத்கா மைதானத்திலிருந்து லால் செளக் வரை பேரணி நடத்த விடுத்திருந்த அழைப்பு வன்முறையில் முடிந்தது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் வன்முறையில் குதித்தனர். முதலில் ஹஸ்ரத்பால் தர்காவுக்கு வெளியே இருந்த போலீஸ் போஸ்ட் தீவைத்து கொளுத்தப்பட்டது. பின்னர் குற்றப் பிரிவு தலைமையகம், மாநில அரசின் மின்துறை அலுவலகம் ஆகியவையும் தீவைத்து எரிக்கப்பட்டது.
அரசு அலுவலகங்களையும், போலீஸ் நிலைகளையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் ஸ்ரீநகரில் முழு அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த வன்முறைக்கு பிரிவினைவாதிகளே காரணம் என முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுபோன்ற வன்முறைகள் அமைதிக்கான நடவடிக்கைகளை சீர்குலைத்து விடுகின்றன. இப்படி இருக்கும்போது அமைதி எப்படி வரும். பிரிவினைவாத தலைவர்கள்தான் போராட்டங்களை தூண்டி விடுகின்றனர் என்றார்.
இதற்கிடையே, காஷ்மீர் நிலை குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடக்கவுள்ளது. அப்போது காஷ்மீருக்கான தீர்வு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் உள்ள பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம். ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தனது தோல்வியை ராணுவத்தின் மீது திணிக்க முயல்கிறது. பாதுகாப்புப் படையினரை (ராணுவத்தினரை) விலக்கிக் கொள்வது என்பது ராணுவம் தோல்வி அடைந்து விட்டதாக மத்திய அரசே ஒப்புக் கொள்வதாக அர்த்தமாகி விடும் என ராணுவம் எச்சரித்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications