காங்கிரஸுக்கு 110 தொகுதிகளை ஒதுக்கியே ஆக வேண்டும்-இளங்கோவன்

ராமேஸ்வரம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு என் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரால் என்னை எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு என் மீது நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்திருத்த வேண்டும். பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் என தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உரிய அதிகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.
1980-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைவியாக இந்திராகாந்தி இருந்தார். அப்போது தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 110 தொகுதிகளிலும், தி.மு.க. 110 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அந்த நிலை வருகிற தேர்தலில் தொடர வேண்டும் என விரும்புகிறோம்.
இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களில் ராமேசுவரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதன் கட்டமைப்பு வசதி களுக்காக ஏற்கனவே மத்திய அரசு ரூ.10.5 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும் ரூ.11 கோடி மத்திய அரசு மூலம் ஒதுக்கப்படும்.
மத்திய அரசு வழங்கி வரும் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் அனைத்தையும் மாநில அரசு தாங்களே செய்து வருவதாக தெரி விக்கிறது. இதனை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு செய்வதாக கூறுவது ஏற்கக்கூடியது அல்ல.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலை தடுக்க மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் ஆகியோர் விரைவில் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதன் மூலம் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வழிபிறக்கும்.
தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்குமா என்று என்னிடம் கேட்டால், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதே எனது பதில் என்றார் இளங்கோவன்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications