தூத்துக்குடி அருகே 2 வயது குழந்தையை எரித்துக் கொன்று தாய் தற்கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் குடும்ப தகராறில் குழந்தையை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆழ்வார்திருநகரி பால்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவர் தந்தை கார்மேகராஜூவுடன் அங்குள்ள பஜாரில் மாளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி சத்யாகலா. இவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒவியா என்ற 2 வயது மகள் உள்ளார். கார்மேகராஜூம், ராம்குமாரும் அதே தெருவில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று ராம்குமார் நெல்லையில் இருந்து வாங்கி வந்த பொருள் தொடர்பாக அவருக்கும், சத்யாகலாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக ராம்குமார் சென்றார். காலை 9 மணி அளவில் படுக்கையறைக்கு மண்எண்ணெய் கேனுடன் சென்ற சத்யகலா, ஒவியாவின் உடலில் மண்எண்ணெய் ஊற்றினார்.
பின்னர் தனது உடலிலும் ஊற்றி குழந்தை மீது தீக்குச்சியை உரசி போட்டார். சில வினாடிகளில் தானும் தீக்குளித்தார். உடலில் தீ வேகமாக பரவியதும் குழந்தை ஓவியா அங்கும் இங்கும் அலறி கொண்டே ஓடியது. ஆனாலும் அதற்குள் தீ உடல் முழுவதும் பரவி சிறிது நேரத்தில் கரிகட்டையாக இறந்தாள்.
குழந்தையின் அலறல் சத்தத்தையும், வீட்டுக்குள் கரும் புகை வருவதையும் கண்ட பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு குழந்தை ஓவியாவும், தாய் சத்யகலாவும் உடல் கருகி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ராம்குமார் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பட்டாணி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். ராம்குமாருக்கும், கலாவுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் தூத்துக்குடி ஆர்டிஓ குருதேவியின் விசாரணையும் நடக்கிறது.
குழந்தையை கொன்று தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications