கன்னிமார் சிலை மீது கால் வைத்து புகை பிடித்த 3 கிறிஸ்தவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே, கன்னிமார் சிலை மீது கால் வைத்து புகை பிடித்த 3 கிறிஸ்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.
செக்காடு ஊரில் இந்த சம்பவம் நடந்தது. செக்காடு ஊரில் உள்ள பிரபல கன்னிமார் சிலையின் மேல் கால்வைத்து சிகரெட் குடித்துக்கொண்டிருந்தனர் 3 பேர். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால் அந்த மூன்று பேரும் ஊர்மக்களுடன் தகராறில் இறங்கினர். இதையடுத்து 3 பேரையும் கிராம மக்கள் சரமாரியாக அடித்தனர்.
பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கிறிஸ்தவ சமூகத்தினர். அவர்கள் மீது
இந்து மதத்தை அவமதிக்கும் நோக்கிலும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications