திருச்சி: கார்-லாரி மோதலில் ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அருகே காரும் லாரியும் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர்.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்த குணசேகரன் (30) புதுக்கோட்டை சென்றுவிட்டு தனது மனைவி அகல்யா மற்றும் குடும்பத்தினருடன் காரில் கோவைக்கு திரும்பினார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே கார் சென்ற போது முன்னால் சென்ற லாரியை குணசேகரன் முந்த முயன்றார். அப்போது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது.

இதில் குணசேகரன் (30), அவரது தாயார் சாரதாமணி (60), உறவினர் ராமசாமி (65), அவரது மனைவி ராஜாமணி (55). இன்னொரு உறவினர் ரெங்கநாயகி (65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

நவீன் (7) என்ற சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான்.

குணசேகரனின் மனைவி, அவரது தம்பி சிவக்குமார், உறவினர் விஜயலட்சுமி, லாரியில் பயணம் 4 பேர் ஆகியோர் படுகாயமடைந்து திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தப்பியோடிவிட்ட லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த விபத்து நடந்த இடத்தில் தான் சில நாட்களுக்கு முன் 3 போலீசார் விபத்தில் பலியாயினர் என்பதும், கடந்த ஒரு மாதத்தில் இந்த இடத்தில் நடந்துள்ள ஐந்தாவது பெரிய விபத்து இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இடத்தில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதும், வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதுமே விபத்துக்குக் காரணம் என்று அப் பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+