விடுவிக்கப்பட்ட புலிகள் மீண்டும் கைது!
கொழும்பு: வட இலங்கையில் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகள், ராணுவ புனர்வாழ்வு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வந்தனர்.
இவ்வாறு அரசாங்கத்தினால் மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்டு வரும் முன்னாள் விடுதலைப் புலிகளில் பலர் மீண்டும் புலானாய்வு பிரிவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆண், பெண் முன்னாள் விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு, பருத்தித்துறை, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இந்த கைது சம்பவங்கள் நடந்துள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர்களைப்பற்றிய தகவல்களை பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் உள்ளனர். இலங்கை அரசின் இந்த நட வடிக்கையால், விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப்புலிகளின் குடும்பத்தினரிடையே பதட்டமும் கவலையும் ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications