தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்காக 15 ஆய்வகங்கள் ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் இருக்கிறதா என்பதை அறிவதற்காக 15 இடங்களி்ல ஆய்வக வசதியை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் மழை பெய்துவருகிறது. அதன்காரணமாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பன்றிக்காய்ச்சல், டெங்குகாய்ச்சல் போன்ற நோய்களும் சில இடங்களில் பரவி வருகின்றன.

காய்ச்சல், தலைவலி,தொண்டைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது பன்றிக்காய்ச்சலின் அறிகுறியாகும். எனவே அத்தகைய அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உடனடியாக சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். பன்றி காய்ச்சல் உள்ளதா என்று அறிய அரசு ஆய்வகங்கள் 7 இடங்களில் உள்ளன. அதன் விவரம்:

1.கிங் ஆய்வு நிலையம், கிண்டி, சென்னை
2.வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி
3.சென்னை மருத்துவக்கல்லூரி
4.கோவை மருத்துவக்கல்லூரி
5.திருச்சி மருத்துவக்கல்லூரி
6.நெல்லை மருத்துவக்கல்லூரி
7. மதுரை மருத்துவக்கல்லூரி.

தனியார் ஆய்வு நிலையங்கள்:

1.போரூர் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி. 2.லிஸ்டர் மெட்ரோ பாலிஸ், சென்னை, 3. பாரத் ஸ்கேன்ஸ் சென்டர் சென்னை, 4.ஐடெக் டயகோனஸ்டிக் சென்டர், திருச்சி, 5.டாக்டர் ரத் லேப் திருச்சி, 6.மைக்ரோ பயாலாஜிக்கல் லேப், கோவை. 7.இம்முனோ ஆக்ஸிலரி லேப், கோவை. 8.விவேக் லேப், நாகர்கோவில்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு இந்த நோய் தாக்கம் கண்டநோயாளிகளிடம் இருந்து பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. வாக்சிபுளு மற்றும் நாசோவாக் என்ற தடுப்பு மருந்துகளும் பொது சந்தையில் விற்பனைக்காக உள்ளன.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் தடுப்பு மருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம். பொதுமக்களின் நலன்கருதி கிண்டியில் உள்ள கிங் ஆய்வு மையத்தில் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம் குறைந்தவிலையில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் சுத்தமான நீரால் சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தும்மும்போதும் இருமும்போதும் கை மற்றும் துணிகளை வைத்து மூடும் சுகாதார பழக்கத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+