ரயிலில் அடிபட்டு 8 மாதத்தில் 147 பேர் பலி: உயிரிழப்பைக் குறைக்க போலீஸ் சிறப்புப் பூஜை
சென்னை: தாம்பரம் ரயில்வே போலீஸ் எல்லைப் பகுதியில் கடந்த 8 மாதங்களில் 147 பேர் ரயிலில் அடிபட்டும், தற்கொலை செய்தும் பலியாகியுள்ளனர். இதையடுத்து உயிர்ப்பலிகளைக் குறைப்பதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில், தாம்பரம் ரயில்வே போலீசார் சிறப்பு பூஜை நடத்தினார்கள்.
பழவந்தாங்கல் ரயில் நிலையம் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள பகுதி தாம்பரம் ரயில்வே போலீசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தாம்பரம் ரயில் நிலைப் பகுதி வழியாக தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இங்கு தினமும் குறைந்தது 2 பேராவது ரயிலில் அடிபட்டு இறக்கின்றனர்.
என்னதான் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று அறிவித்தாலும் மக்கள் அதை எல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. சிலர் தண்டவாளத்தை கடக்கும்போது காதில் ஹெட்செட் மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டே கடக்கின்றனர். இதன் விளைவு பாட்டைக் கேட்டவாறே பரலோகம் செல்கின்றனர்.
இது தவிர செல்போனில் பேசிக் கொண்டும், நண்பர்கள் அல்லது காதலியுடன் பேசிக் கொண்டும் தண்டவாளத்தைக் கடப்பவர்கள் ரயிலில் அடிபட்டு இறக்கின்றனர். இதுதவிர தற்கொலை செய்வோரும் கணிசமாக உள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் கடந்த 8-ம் தேதி வரை ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆகும். இவ்வாறு மக்கள் இறப்பதைக் குறைக்க நினைத்த ரயில்வே போலீசார் ஜோதிடரிடம் சென்றனர். அவர்களின் குறையைக் கேட்ட ஜோதிடர், விபத்துக்கள் நடக்க இறந்தவர்களின் ஆவிகளின் வேலை தான் காரணம் என்று 'கண்டுபிடித்துக்' கூறினார். மேலும் சிறப்பு பூஜை நடத்துமாறும் கூறினார்.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜை நடந்தது. ரயில்வே காவல் நிலையத்தில் நடந்த இந்த பூஜையில் போலீசார் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த மாதம் மட்டும் ஒரே வாரத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இந்த பூஜை நடந்த பிறகு 2 நாட்கள் யாரும் பலியாகவில்லை. இந்நிலையில் ரயிலில் சிக்கி கூடுவாஞ்சேரியில் ஒருவர் இறந்துள்ளார். மேலும், இன்று தாம்பரம் சானடோரியத்தில் ரயிலில் அடிபட்ட ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது போன்ற விபத்துகளைத் தடுக்கப் பூஜைகள் நடத்தினால் போதாது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் அவசியம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications