இன்று முதல் தமிழகத்தில் ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவை மேற்கொள்ளலாம்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வருகிறது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் ஒரு மணி நேரத்தில் அதைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர்.
ஆண்டுதோறும் பத்தாவது, பிளஸ்டூ முடிப்போர், ஆசிரியர் பயிற்சி முடிப்போர், பட்டதாரிகள் என லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து வைக்க வருகின்றனர்.இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெரும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பதிவைப் புதுப்பிக்கவும் பெரும் கூட்டம் வருகிறது.
இதையடுத்து இந்த நிலையை சீர்படுத்தும் வகையில், கம்ப்யூட்டர்மயமாக்கும் பணிகள் தொடங்கின. ரூ. 5 கோடி அளவில் தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பகங்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது ஆன்லைனிலேயே பதிவு, பதிவு புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இன்று முற்பகல் 11 மணியளவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
11 மணிக்கு மேல் கீழ்க்கண்ட முகவரிக்குச் சென்று பதிவு புதுப்பித்தல், பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை இனி எங்கிருந்தபடியும் செய்யலாம்.
ஆன்லைன் மூலம் பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கான இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications