கடையநல்லூரில் மாசுபட்ட குடிநீரைக் குடித்த 20 பேருக்கு வாந்தி மயக்கம்
கடையநல்லூர்: கடையநல்லூரில் திடீர் வாந்தி, மயக்கத்தினால் சிறுவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கற்பகவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், சாந்தி, முப்புடாதி, கருப்பசாமி, செல்வராஜ், பட்டமுத்து, கல்யாணி, பேச்சிமுத்து, கார்த்தி, சாந்தி, கீதா உள்பட 20-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவில் நேற்று வழங்கப்பட்ட அன்னதான விழாவில் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் அடைந்ததாக பாதிக்கப்பட்டோர் கூறினர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாசு கலந்த குடிநீரைக் குடித்ததால் தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
தென்காசி ஆர்.டி.ஓ. சேதுராமன், தாசில்தார் பரமசிவன் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று கிருஷ்ணாபுரம் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications