கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக, ம.ஜ.தளம் தலா ஒரு இடத்தில் வெற்றி: காங்கிரசுக்கு 'முட்டை'
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் இரு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக ஒரு இடத்திலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 'முட்டை' கிடைத்துள்ளது.
சித்ரதுர்கா மாவட்டம் கடூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் விஸ்வநாத் 13,000 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியை காங்கிரசிடமிருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.
குல்பர்கா தெற்கு தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் அருணா பாட்டீல் சுமார் 3,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் சிங்கை வென்றார். இதன்மூலம் இந்தத் தொகுதியை பாஜகவிடமிருந்து மதசார்பற்ற ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது.
இந்தத் தொகுதியில் தோற்ற அஜய் சிங், முன்னாள் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் தரம் சிங்கின் மகனாவார். இவர் இங்கு தோற்பது இது இரண்டாவது முறையாகும். கர்நாடகத்தை ஆண்ட மிக மட்டமான முதல்வர்களில் ஒருவர் என்ற 'பெருமையை'ப் பெற்றவர் தரம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதையடுத்து கர்நாடக சட்டசபையின் எதிர்க் கட்சித் தலைவர் பதவிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
அரசியல்ரீதியில் முடங்கிப் போயிருந்த தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு இந்த வெற்றி பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications