தீயணைப்புப் படையில் செயின் பெர்னார்ட் வகை நாய் ரெமோ
சென்னை: தமிழ்நாடு தீயணைப்புப் படையில் மீட்புப் பணியில் ஈடுபடுத்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'செயின்ட் பெர்னார்ட்' வகை நாய் ஒன்றை வாங்கியிருப்பதாக அந்தத் துறையின் இயக்குநர் டிஜிபி ஆர். நடராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
இயற்கைச் சீற்றங்களில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்கத் தீயணைப்புப் படையினர் பல் யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
இயற்கைச் சீற்றங்கள் மற்றும் விபத்துகளின்போது கண்ணுக்குத் தெரியாத இடங்களில் மாட்டிக் கொள்பவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய் அடங்கிய இடர் மீட்பு அணி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அணியில் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக மோப்ப நாய் இடம் பெற்றுள்ளது.
இந்த பணிக்காக லேப்ரடார், டாபர்மேன், டால்மேஷன் வகை நாய்கள் 5 பயன்படுத்தப்படுகிறது. இவை தங்குவதற்கான வசதி செய்ய ரூ. 6 லட்சமும், பராமரிப்பதற்கு ரூ. 2 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அணியின் புது வரவு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'செயின்ட் பெர்னார்ட்' வகை நாய். பிறந்து 45 நாட்களே ஆன இதற்கு ரெமோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நாய்க் குட்டியின் விலை ரூ. 1.5 லட்சம் ஆகும்.
ரெமோ தாம்பரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த பிறகு நிலச்சரிவுக்கு பெயர்போன நீலகிரி மாவட்டத்தில் மீட்புப் பணியில் ஈடுபடும்.
ரெமோ தங்க குளிர்சாதன வசதியுடன் கூடிய பிரத்யேக வாகனம் வாங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்த நாய்க் குட்டியின் பராமரிப்பு மற்றும் உணவிற்கு ரூ. 2,000 ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications