குமரிக் கடலில் கடற்படை தொடர்ந்து 3 நாள் ஆய்வு
நித்திரவிளை: குமரிக் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவும் வாய்ப்பு உள்ளதா என இந்திய கடற்படை கப்பல் ஷாருக் நேற்று முன்தினம் நித்திரவிளை அருகே ஆய்வு நடத்தியது.
மும்பையி்ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே எடப்பாடு கடற்கரைப் பகுதியில் நேற்று காலை ஒரு கப்பல் திடீரென வந்து நின்றது.
கரையில் இருந்து சுமார் அரை கிலோ மீ்ட்டர் தொலைவில் நின்ற கப்பலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜேசுராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விசாரணையில் அது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஷாருக் கப்பல் என்பது தெரிய வந்தது.
அந்த கப்பலில் 15 கடற்படை வீரர்கள் கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் கடற்கரை பகுதிகளை சர்வே எடுத்து தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்ய வந்துளளனர். கப்பலில் வந்துள்ள கடற்படை வீரர்கள் கடலின் ஆழம், அலையின் தன்மை போன்றவற்றை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
ஆய்வு இன்று வரை தொடர்ந்து நடக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications