மொரீஷியஸ் துணை அதிபர் அங்கிடி வீரய்யா செட்டியார் மரணம்

Subscribe to Oneindia Tamil

Angidi veeraiah chettiyar
போர்ட் லூயிஸ்: மொரீஷியஸ் நாட்டின் துணை அதிபர் அங்கிடி வீரய்யா செட்டியார் மரணமடைந்தார். அவருக்கு வயது 83.

இந்திப் பெருங்கடலில், உள்ள குட்டி தீவு நாடு மொரீஷியஸ். இதன் துணை அதிபராக கடந்த 2007ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் ஏவி செட்டியார் என அழைக்கப்படும் அங்கிடி வீரய்யா செட்டியார். 83 வயதான செட்டியார் நேற்று மரணமடைந்தார்.

நீண்ட காலமாக உடல்நலக்குறைவினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் மரணமடைந்தார். மொரீஷியஸ் நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்த சர் சிவசாகர் ராம்கூலத்திற்கு மிகவும் நெருக்கமான தலைவர்களில் இவரும் ஒருவர்.

வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செட்டியார் கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2007ம் ஆண்டு முதல் துணை அதிபராக செயல்பட்டு வந்தார் செட்டியார்.

இதற்கு முன்பு, 1997 முதல் 2002 வரை துணை அதிபராக இருந்தார். பின்னர் 2002ம் ஆண்டு தற்காலிக அதிபராக பதவி வகித்தார்.

செட்டியாரின் இறுதிச் சடங்குகள் குறித்த முழுமையான விவரம் இன்னும் வெளியாகவில்லை. செட்டியாரின் மறைவைத் தொடர்ந்து மொரீஷியஸ் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செட்டியாரின் பூர்வீகம் விருதுநகராகும். அங்கு விருதுநகர் நகரசபைத் தலைவராகவும் முன்பு பதவி வகித்துள்ளார். பின்னர் அவர் தனது குடும்பத்துடன் மொரீஷியஸ் வந்து செட்டிலானார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 3 முறை துணை அதிபராக பதவி வகித்தவர்.

மறைந்த செட்டியாருக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+