முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே கட்டும் புதிய அணையின் உயரத்தைக் குறைக்கிறது கேரளா
கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே கட்டத் திட்டமிட்டுள்ள புதிய அணையின் உயரத்தைக் குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஒரு கமிட்டியையும் அது நியமித்துள்ளது.
தமிழகத்தின் கடும் எதிர்ப்பை மீறி, மத்திய அரசின் மறைமுக ஆதரவுடன், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டும் ஆய்வை மேற்கொண்டு முடித்துள்ளது கேரளா.
இதையடுத்து கேரள நீர்ப்பாசன வரைவு ஆராய்ச்சி வாரியத்தினர் தற்போது அணை குறித்த விவரங்களை தீர்மானித்து முடித்துள்ளனர்.
அதன்படி, புதிய அணையை 700 மீட்டர் நீளம், 148 அடி உயரம், 7 மீட்டர் அகலம் கொண்டதாக கட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அணையின் உயரத்தை குறைக்குமாறு அணைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து கூடுதல் செயலாளரும், சபரிமலையின் சிறப்பு அதிகாரியுமான ஜெயக்குமார் தலைமையில் ஐடிஆர்பி முதன்மைப் பொறியாளர் சி.என்.சதி, முன்னாள் முதன்மைப் பொறியாளர் எம்.சசிதரன் ஆகியோர் தலைமையில் ஒரு உயர் மட்டக் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டு எந்த அளவுக்கு அணையின் உயரத்தைக் குறைக்க முடி்யும் என அரசுக்குப் பரிந்துரைக்கும்.












Click it and Unblock the Notifications