காஷ்மீருக்கு 20ம் தேதி அனைத்துக் கட்சிக் குழு பயணம்
டெல்லி: காஷ்மீரில் வன்முறை தலைவிரித்தாடும் நிலையில், அனைத்துக் கட்சிக் குழு வரும் 20ம் தேதி அங்கு சென்று பல்வேறு தரப்பினரையும் சந்திக்கிறது.
டெல்லியில் நேற்று பிரதமர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்துக்கட்சி குழு காஷ்மீர் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த குழு வரும் 20ம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் ஹூரியத் இயக்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசுவார்கள். பெண்கள் அமைப்பினர், இளைஞர்கள் அமைப்பினர், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட யாரும் அனைத்துக்கட்சி குழுவினரை சந்தித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்-திமுக:
முன்னதாக டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு,
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எனது தலைவர் தமிழக முதல்வர் கருணாநிதி என்னை அனுப்பியபோது, அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து காஷ்மீரத்தில் நிரந்தரமான அமைதி நீடிக்க எந்த விலை கொடுத்தும் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பேசுமாறு என்னிடம் அறிவுறுத்தினார்.
காஷ்மீர் மக்களின் கட்டுக்கடங்காத கோபத்தின் விளைவாக பாதுகாப்பு படையினரின் மீது கற்கள் எறிகின்ற சம்பவம் தொடர்ந்து நீடிக்கிறது. அதன் விளைவாக 18 பேருக்கு மேல் இறந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விரும்பத்தகாத இந்த விளைவுகளுக்கு காரணம் என்ன? காலம் காலமாக அங்குள்ள மக்களின் பொறுமை, சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய உணர்வுகளுக்கு தீர்வு ஏற்படவில்லை. அடக்கி வைக்கப்பட்ட அந்த உணர்வுகள், வெடித்துச் சிதறி கோபக்கனல் கொப்பளிக்க போராட்டம் நடத்துகின்றனர். பலர் உயிர்களை நாடு இழந்திருக்கிறது. இந்த நிலை நீடிக்கக் கூடாது.
அவர்களும் நமது இந்திய நாட்டின் சகோதரர்கள், சகோதரிகள் என்பது மட்டுமல்ல, இந்தியாவின் அங்கத்தினர்கள். அவர்களுடைய உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்.
காஷ்மீர் மக்கள் ஏறத்தாழ 63 ஆண்டுகளாக பெரிய உள்நாட்டு புரட்சியிலோ, வன்முறையிலோ ஈடுபட்டதில்லை. இப்போது அந்த விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்றால் அவற்றிற்குரிய காரணங்களை முதலில் நாம் அறிய வேண்டும்.
காஷ்மீரில் இப்போது போராடும் மக்கள் மதத்திற்காக தற்கொலை செய்துகொள்ளும் பிதாயின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அல்லது மதத்திற்காக போராடும் ஜிகாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போலவே காஷ்மீரில் உள்ள இந்தியர்களும் உரிமைக்காக போராடுகிறார்கள்.
மத்தியில் அமைந்துள்ள எந்த அரசாக இருந்தாலும் இந்த மக்களின் மனக் குறைகளைக் கேட்டறிந்து அதற்குரிய திட்டங்களை செயல்படுத்தவில்லை என்பது அந்த மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆகவே அவர்களை நேரில் சந்தித்து, குறைகளைக் கேட்டு, அதை முறைப்படி ஆவன செய்ய வேண்டும்.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு காஷ்மீர் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிய ஏற்பாடு செய்வதோடு, அதன் அடிப்படையில் திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்தி மக்களின் நல்லெண்ணத்தைப் பெற வேண்டும் என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications