'பாபர் மசூதி இடிப்புக்கு ராஜிவ் காந்தியே மறைமுக காரணம்'

பாரிசின் போ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய அரசியல் மற்றும் வரலாற்றுப் பிரிவின் பேராசிரியராக உள்ள அவர் இன்று டெல்லி பிரான்ஸ் தூதரகத்தில் 'Religion, Caste and Politics in India' என்ற தனது நூலை வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
வரும் 24ம் தேதி அயோத்தி நில விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படவுள்ள. அந்த தினம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை தினமாக அமையும். இதை தீர்ப்பை வழங்கப் போகும் நீதிபதிகளும் அறிவர்.
இந்த விவகாரத்தில் அமைதியை எட்ட இரு தரப்பினருக்கும் மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. முஸ்லீம்களை தேசிய நீரோட்டத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகளை இந்துத்துவா சக்திகள் துவக்க வேண்டும்.
தீவிரமான மதவாதத்தை இந்திய மக்கள் ஏற்கவில்லை என்பதையே 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு மறைமுக காரணம் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜி்வ் காந்தி தான். அவர் தான் ஓட்டுக்காக ஒரு மதத்தினரை இன்னொரு மதத்தினருக்கு எதிராக களமிறக்கினார்.
ஷா பானு விவகாரத்தில் முஸ்லீம்கள் ஓட்டுக்களைப் பெறும் வகையில் நடவடிக்கை எடுத்தார். பின்னர் இந்துக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக விஸ்வ இந்து பரிஷத்தின் கோரிக்கையை ஏற்று பாபர் மசூதியை சிலை வழிபாட்டுக்காக திறந்துவிட்டார். இது ராமரின் மண் என்று கூறி அவர் பைசியாபாத்திலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார்.
இதன்மூலம் இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களை இந்துக்களுக்கு எதிராகவும் களமிறக்கினார்.
பாஜக முக்கியத்துவம் இழந்துவிட்ட கட்சி என்பதை நான் ஏற்க மாட்டேன். பிகார் தேர்தல் அவர்களுக்கு மிகப் பெரிய சோதனையாக இருக்கும்.
மத்தியிலும் பாஜக ஆட்சிக்கு வரலாம். அதற்கு அவர்களை விட காங்கிரசே அதிகமான காரணமாக இருக்கும். இப்போது இந்திய அரசு நிலைகுலைந்துபோய் உள்ளது. மத்திய அரசு கூட்டணிக்குள் பல சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால் அரசே முடங்கிப் போயுள்ளது. பிரச்சனைகளை சமாளிக்கும் பலம் பிரதமருக்கு இல்லை.
மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்தி பிரதமராகலாம். 'காந்தி' என்ற அடைமொழி இல்லாமல் காங்கிரஸ் இல்லை. இதனால் அடுத்த பிரதமர் பதவிக்கு ராகுலையே அந்தக் கட்சி முன் நிறுத்தலாம்.
தீவிரமான மதவாத கொள்கையை பாஜக வைத்திருக்கும் வரை, பாஜகவின் தலைவரை ஆர்எஸ்எஸ் நியமித்துக் கொண்டிருக்கும் வரை நரேந்திர மோடியால் பிரதமர் ஆகவே முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை இனி கூட்டணி ஆட்சிகளே அமையும். பாஜக ஆட்சிக்கு வரவும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியம். ஆனால், நரேந்திர மோடி போன்றவர்களை பாஜகவுடன் உள்ள கட்சிகளே பிரதமர் பதவிக்கு ஏற்க மாட்டார்கள் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications