இந்திய ஏற்றுமதி 22.5% அதிகரிப்பு: வர்த்தக பற்றாக்குறையும் அதிகரிப்பு
டெல்லி: கடந்த ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 22.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி ரூ.76,500 கோடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராகுல் குல்லார் கூறுகையில்,
ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் இறக்குமதியும் 32.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,36,600 கோடியாக உயர்ந்துள்ளது. இறக்குமதி மிகவும் அதிகரித்துள்ளதால் வர்த்தக பற்றாக்குறை கடந்த 23 மாதங்களில் இல்லாத அளவிற்கு ரூ.60,100 கோடியாக அதிகரித்துவிட்டது.
(ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகரிக்கும்போது, வர்த்தக பற்றாக்குறை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதால், டாலருக்கான தேவை அதிகரித்து, இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது)
இதை சமாளிக்க மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
பொருளாதார வளர்ச்சி வேகத்தில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அடிப்படையில் ஆசியாவின் 3வது நாடாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications