மீண்டும் மும்பை தாக்குதல் போல நடந்தால் இந்தியா, பாக். இடையே அணு யுத்தம் மூளும்-அமெரிக்க நிபுணர்

மீண்டும் மும்பை பாணி தாக்குதல் இந்தியாவில் நடத்தப்பட்டால் இந்தியா அமைதியாக இருக்காது. பாகிஸ்தான் மீது அது போர் தொடுக்கும். இந்தப் போர் அணு ஆயுத யுத்தமாகவும் மாறும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களை குறி வைத்தே இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்றாலும் பாகிஸ்தான் போரை வேறு பாதைக்குக் கொண்டு போய் முழு அளவிலான போராக மாற்றி விடும் என்றும் பீட்டர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், மும்பை பாணி தாக்குதல் நடக்கக் கூடாது என்று அனைவரும் கருதுவதே இந்தப் போரைத் தடுக்க ஒரே வழி. காரணம், இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் மூண்டால் அது அணு ஆயுத யுத்தமாக மாறும் என்பதே இந்தக் கவலைக்குக் காரணம்.
இந்தப் போர் தெற்காசிய சூழ்நிலையை வெகுவாக மாற்றி விடும். மும்பையில் நடந்த தாக்குதலின்போது இந்தியர்கள் மிக மிக ஆவேசமாக இருந்தனர், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அபரிமிதமாக இருந்தது. ஆனால் இந்திய அரசு மிகவும் பொறுமை காத்தது, அமைதி காத்தது. ஆனால் மீண்டும் அப்படி ஒரு தாக்குதல் நடந்தால் இந்தியா அமைதி காக்கும் எனக் கூற முடியாது.
மீண்டும் மும்பை பாணி தாக்குதல் நடந்தால் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியா மீது விழும். அமெரிக்காவுக்கும் இது மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் மும்பை 2 தாக்குதல் நடந்து விடாமல் தடுக்க வேண்டிய கடமையும் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்துள்ளது என்றார் அவர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications