விஜய்காந்துக்கு 150 தொகுதியா கொடுக்க முடியும்?: ராஜ கண்ணப்பன் கேள்வி

அதிமுகவிலிருந்து பிரிந்து தனிக் கட்சி கண்டு, பின்னர் திமுகவில் இணைந்து, இப்போது அதிமுகவுக்குப் போய்விட்ட கண்ணப்பன் சிவகாசியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,
இடைத்தேர்தல் முடிவுகளை எல்லாம் அளவீடாக கருதக் கூடாது. பொது தேர்தலில் கணக்கு வேறு மாதிரியாகவே இருக்கும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக இடையிலான ஓட்டு வித்தியாசம் வெறும் 14 லட்சம் தான். ஒரு தொகுதிக்கு 5,000 ஓட்டும், பூத்திற்கு 20 முதல் 25 ஓட்டுக்களும் தான் வித்தியாசம் இருந்தது. இதில் பூத்துக்கு மேலும் 15 ஓட்டுக்களைப் பெற்றால் போதும் நாம் ஆட்சியை பிடித்து விடுவோம்.
30 சீட், 40 சீட்டுக்கு எலாலம் எப்படி கூட்டணி வைக்க முடியும் என்று சிலர் (விஜய்காந்த்) பேசுகின்றனர். அவர்களுக்கு என்ன 150 தொகுதியா கொடுக்க முடியும்?.
ஓட்டு வங்கி பலத்தின்படியும் விகிதாச்சாரப்படியும்தான் தொகுதி ஒதுக்க முடியும். 5 சதவீத ஓட்டு வாங்கினால் 17 தொகுதி, காங்கிரஸ் மாதிரி 12 சதவீத ஓட்டு வாங்கினால் 45 முதல் 50 சீட்டுக்கள் வரை தரலாம்.
காங்கிரஸ் கட்சியின் கொத்தடிமையாக உள்ள கருணாநிதி மாநில உரிமைகளை விட்டு கொடுத்து வருகிறார்.
புரட்சித் தலைவியைப் பொறுத்தவரை கூட்டணியை அவர் எப்போதும் அவமதித்ததில்லை. சரியான நேரத்தில் அவர் சரியான முடிவெடுப்பார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications