போப்பைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய 5 பேர் லண்டனில் கைது

லண்டன் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
போப்பாண்டவர் நான்கு நாள் பயணமாக இங்கிலாந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரைத் தாக்கி கொலை செய்யும் திட்டத்துடன் இருந்த ஐந்து பேர் பிடிபட்டுள்ளனர்.
மத்திய லண்டனில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனம் மற்றும் வடக்கு, கிழக்கு லண்டனில் உள்ள சில வீடுகளை போலீஸார் ரெய்டுநடத்தியபோது இந்த ஐந்து பேரும் சிக்கினர். அவர்கள் யார், என்ன மாதிரியான திட்டத்துடன் இருந்தனர் என்பது தெரியவில்லை.
இவர்களுக்கு 26 முதல் 50 வயது வரைக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர், விவரங்களை போலீஸார் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், போப்பாண்டவரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறு பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. அவை திருப்திகரமாக இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொண்டு மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு லண்டனில் ஒரு பஸ் மற்றும் மெட்ரோ ரயில்களை தீவிரவாதிகள் தாக்கினர். நான்கு இங்கிலாந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications