காஷ்மீருக்கு நாளை செல்கிறது அனைத்துக் கட்சிக் குழு
ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு நாளை அனைத்துக் கட்சிக் குழு விஜயம் செய்கிறது. இரண்டு நாள் பயணமாக செல்லும் இந்தக் குழுவினர், அங்கு நிலவும் உண்மை நிலையை ஆய்வு செய்யவுள்ளனர். பல்வேறு குழுக்களை சந்தித்துப் பேசவுள்ளனர்.
கடந்த 3 மாத காலமாக அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது காஷ்மீர். தினசரி ஒருவர் உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. பற்றி எரிந்து கொண்டிருக்கும் காஷ்மீரில் அமைதியை கொண்டு வர என்ன செய்யலாம் என்பது குறித்து சமீபத்தில் பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தின் இறுதியில், காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நாளை இக்குழு 2 நாள் பயணமாக காஷ்மீர் செல்கிறது. 38 பேர் கொண்ட இக்குழுவினர் காஷ்மீரின் உண்மை நிலையை நேரில் காணவுள்ளனர். பல்வேறு பிரிவினைவாதக் குழுக்களைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இந்தக் குழுவில் இடம் பெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தற்போது இடம் பெறாது எனத் தெரிகிறது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசைக் குறை கூறி குழுவினரின் திட்டத்திலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக கூறியுள்ளது அக்கட்சி.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இக்குழுவுக்குத் தலைமை தாங்கி காஷ்மீர் வருகிறார் என்பது நினைவிருக்கலாம்..
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications