For Daily Alerts
டாமன் யூனியன் பிரதேசத்தி்ல் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை
சென்னை: டாமன் யூனியன் பிரதேசத்தில் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜா முருகன் (33) டாமன் யூனியன் பிரதேசத்தில் பயிற்சி சப்-கலெக்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் ராஜா முருகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரவி்ல் ராஜா முருகன் தனது அரசு வீட்டு வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை சேர்ந்த ராஜா முருகனின் மனைவி ஓய்வு பெற்ற ஐ.ஜியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.