நான் எப்போதாவது பூக்கும் அரிய மலர் அல்ல-ராகுலை சீண்டி மமதா பேச்சு
நானூர் (மேற்கு வங்கம்): நான் எப்போதாவது பூக்கும் அபூர்வ மலர் அல்ல என்று கூறியுள்ளார் திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி.
இதன் மூலம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை அவர் மீண்டும் சீண்டியுள்ளார். ராகுல் காந்தி கூட்டுப் புழு போல இருக்கிறார். எப்போதாவதுதான் வெளியில் தலை காட்டுகிறார் என்று முன்பு விமர்சித்திருந்தார் மமதா. இந்த நிலையில் மீண்டும் அவரை மறைமுகமாக சீண்டியுள்ளார் மமதா.
மேற்கு வங்க மாநிலம் நானூர் என்ற இடத்தில் அவர் பேசுகையில், எப்போதாவது தான் சில பூக்கள் பூக்கும். அவை அபூர்வமாகத்தான் பூக்கும். சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள். எப்போதாவதுதான் அவர்களைப் பார்க்க முடிகிறது. அதுவும் தேர்தல் சமயத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது. தேர்தல் முடிந்தவுடன் மறைந்து போய் விடுகிறார்கள். ஆனால் நாம் அப்படி அல்ல.
தங்கப் படுக்கை மீது நாம் படுத்தபடி அரசியல் செய்யவில்லை. அடி மட்ட மக்களுடன் இருந்து அரசியல் செய்து வருகிறோம். நான் பயணிக்கும் சாலை குறித்த அத்தனை விவரங்களும் எனது விரல் நுனியில் இருக்கும். அதன் தன்மை என்ன என்பது எனக்குத் தெரியும். ஆண்டு முழுவதும் நான் மக்களுடன்தான் இருக்கிறேன். மக்களின் பிரச்சினைகள் எனக்குத் தெரியும். அவர்களுக்கும் என்னைத் தெரியும். அவர்கள் பேசும் மொழி எனக்குப் புரியும் என்றார் மமதா.
சமீபத்தில் கூட்டணி தொடர்பாக திரினமூல் காங்கிரஸ் நடந்து கொள்ளும் முறையை கடுமையாக விமர்சித்திருந்தார் ராகுல். மமதா மீது அன்பு வைத்துள்ளேன். அதற்காக அவருக்கு அடிமை போல இருக்க முடியாது. கெளரவம் இருந்தால்தான் கூட்டணி அமைக்க முடியும். மரியாதை இல்லாத இடத்தில் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications