அயோத்தி தீர்ப்பு எதிரொலி-அசம்பாவிததைத் தடுக்க தென் மாவட்டங்களில் 12 ஆயிரம் போலீசார் குவிப்பு

இதையடுத்து தமிழகத்தில் டி.ஜி.பி. லத்திகா சரண் உத்திரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணி்ப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் பாதுகாப்புக்காக 12 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை டி.ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் எஸ்.பி.க்கள் ஆஸ்ரா கார்க்-நெல்லை, ராஜேந்திரன்-கன்னியாகுமரி, கபில்குமார் சரத்கார்-தூத்துக்குடி ஆகியோர் மேற்பார்வையில் முக்கிய பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்படுகின்றன. வாகன சோதனையும் நடத்தப்பட உள்ளது.
மணிமுத்தாறில் 500 போலீசார் அடங்கிய 4 பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். மேலும் ஊர்க் காவல்படையினர் மற்றும் 400 தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்படுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட், பேருந்து நிலையம் மற்றும் மேம்பாலங்கள் உள்ளி்ட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பு பணிகள் தொடரும் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெல்லை மாநகரத்தில் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications