அயோத்தி தீர்ப்பு: அப்பீல் செய்யலாம்-தீர்ப்புக்கு பின் அமைதி காக்க வேண்டும்: ப.சிதம்பரம்

அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில்,
ஒரு சட்ட நடவடிக்கையின் முடிவுதான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் இந்தத் தீர்ப்பு. இதை அமைதியான முறையில் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும்.
இந்த தீர்ப்பில் திருப்தி இல்லாத ஒருவரோ அல்லது இரு தரப்பினருமோ சுப்ரீம் கோர்ட்டை உடனடியாக அணுகி அப்பீல் செய்ய வாய்பபுகள் உள்ளன. இந்தத் தீர்ப்பு இறுதியானதல்ல, யார் வேண்டுமானாலும் அப்பீல் செய்து நிவாரணம் தேடலாம்.
எனவே இதை அமைதியான முறையில் எதிர்கொள்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். எந்த வகையிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
இந்தத் தீர்ப்பு ஒருவருக்கு வெற்றி என்றோ இன்னொருவருக்கு தோல்வி என்றோ பார்க்கக் கூடாது. தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்க முன்வர வேண்டும்.
தீர்ப்பையொட்டி அனைத்து மாநில அரசுகளும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் ப.சிதம்பரம்.
தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலைதான் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை பரிசீலித்த நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், இதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை. மனுதாரர் வேறு கோர்ட்டை நாடுமாறு கூறி விட்டது.
இதனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி தனது தீர்ப்பை 24ம் தேதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் ப.சிதம்பரம் இன்று அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்து அனைவரும் அமைதி காத்து, ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications