அயோத்தி தீர்ப்பை தள்ளி வைக்க கோரும் மனு-விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

மேலும், இது சிவில் வழக்கு என்பதால்வேறு கோர்ட்டை (பெஞ்ச்சை) நாடுமாறும் அது கூறியுள்ளது. இதன் காரணமாக, அயோத்தி வழக்கின் தீர்ப்பு திட்டமிட்டபடி செப்டம்பர் 24ம் தேதி வெளியாவதற்கு தடை விதிக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரமேஷ் சந்திர திரிபாதி என்ற தொழிலதிபர் இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில்,
தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட மனுவை விசாரித்த 3 நீதிபதிகளில் ஒருவர், தீர்ப்பைத் தள்ளிப்போட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்தை மற்ற இரு நீதிபதிகளும் நிராகரித்துள்ளனர்.
டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்தநிலையில் தீர்ப்பு வெளியானால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
அயோத்தி தீர்ப்பால் மத ரீதியில் பெரும் பதட்டம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதை அடக்க பெருமளவிலான படையினர் தேவைப்படுவர். அதை உடனடியாக திரட்டுவது சாத்தியமில்லாதது.
எனவே தீர்ப்பை தள்ளிப் போட உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.மேலும் இந்த விவகாரத்தை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று பிற்பகலில் நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், ஏ.கே.பட்நாயக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கபீர் கூறுகையில், இந்த மனு சிவில் மனுவாகும். எனவே இதை இங்கு விசாரிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. வேறு கோர்ட்டை மனுதாரர் அணுகலாம் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
இதன் மூலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு (தீர்ப்பை ஒத்திவைக்க முடியாது என்ற தீர்ப்புக்கு) தடை விதிக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications