சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் திமுக-நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனை

திமுக தலைவரான முதல்வர் கருணாநிதி நாளை முதல் மாவட்டவாரியாக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்துகிறார்.
நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்கும் இந்தக் கலந்தாய்வில் முதலில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்ட, மாநகர ஒன்றிய நகர, பகுதி கழக நிர்வாகிகளுடன் கருணாநிதி தனித்தனியே ஆலோசனை நடத்துகிறார்.
28ம் தேதி தர்மபுரி வடக்கு, தர்மபுரி தெற்கு மாவட்டம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடனும், 29ம் தேதி கரூர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடனும், 30ம் தேதி சேலம், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடனும்,
அக்டோபர் 1ம் தேதி சிவகங்கை, விருதுநகர், 4ம் தேதி மதுரை புறநகர், மதுரை மாநகர், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும்,
6ம் தேதி திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், 7ம் தேதி பெரம்பலூர், அரியலூர், 8ம் தேதி நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனும்,
9ம் தேதி தஞ்சை, கடலூர், 11ம் தேதி திருநெல்வேலி விழுப்புரம், திருவண்ணாமலை, 12ம் தேதி வேலூர், காஞ்சீபுரம், 13ம் தேதி கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல்,
14ம் தேதி திருவள்ளூர், தென் சென்னை. வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் தனித்தனியே ஆலோசனை நடத்துகிறார்.
இதையொட்டி திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், இக்கூட்டங்களில் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர, பகுதி கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்வர்.
கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள் தங்கள் பகுதியில் இது வரை நடைபெற்ற பொதுக் கூட்டங்கள் பற்றிய விவரங்களையும், 'மினிட்' புத்தகத்தையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications