பிரபல மதுரை தனியார் ரத்த வங்கிக்கு சுகாரதாரத்துறை தடை
மதுரை: மதுரையில் அரசு விதிகளை பின்பற்றாத பிரபல ரத்த வங்கிக்கு தமிழக சுகாரதாரத்துறை தடை வித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மதுரை மண்டலத்தில் உள்ள தனியார் ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து மருந்து கட்டுப்பாடுத் துறை மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அதில் மதுரை, சிவகங்கை சாலையில் உள்ள விக்னேஷ் ரத்த வங்கியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மேலும், சில சில முக்கியக் குறைபாடுகளுடன் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்த ரத்த வங்கியின் 2008-2012ம் ஆண்டுக்கான உரிமம் புதுப்பித்தல் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மருந்து மற்றும் அழகு சாதன சட்ட விதிகளின்படி ரத்தத்தை சேமிக்கவும், விநியோகம் செய்யவும் விக்னேஷ் ரத்த வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications