காற்றாலை மின்சாரம் கட்: தமிழகத்தில் 3 மணி நேர மின்தடை அமல்
நெல்லை: தமிழகத்தில் காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காததால் தினசரி 3 மணி நேர மின்தடை அமுலுக்கு வந்துள்ளது.
மின் பற்றாக்குறை காரணமாக தமிழகம் முழுவதும் 2 மணி நேரம் மின்தடை அமுலில் உள்ளது. கடந்த மே மாதம் முதல் காற்றாலை மூலம் தினசரி 1800 மெகாவாட் மின்சாரம் கிடைத்ததால் சிறுது காலம் மின்தடை நேரம் குறைந்தது.
இருப்பினும் தென்மேற்கு பருவக் காற்று சரிவர வீசாததால் மீண்டும் காற்றாலை மின்உற்பத்தி குறையத் தொடங்கியது. நேற்று காற்றாலைகள் மூலம் 240 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது. இதனால் தமிழகத்தில் மின்பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
இதை சமாளிக்கக் கூடுதலாக 1 மணி நேரம் மின்தடை ஏற்படுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. நேற்று முதல் 3 மணி நேர மின்தடை அமுலுக்கு வந்தது.
மின் தேவைக்கேற்ப மாலை 6 மணி முதல் 10 மணி வரை தேவைப்பட்டால் கூடுதலாக அரை மணி நேரம் ஒவ்வொரு பகுதியாக மின்தடை ஏற்படுத்தவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
காற்றாலை மூலம் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை கிடைக்க வேண்டிய மின்சாரம் கடந்த 21-ம் தேதியே குறைந்து விட்டதால் மின்தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications