மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்திய-இலங்கை கடற்படைகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து மண்டபம் இந்திய கடலோர காவல் படை தலைமை அதிகாரி டி.எஸ்.சைனி கூறுகையில்,
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனை குறித்து இலங்கை கடற்படையினருடன் அவசரமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்திய கடற்படை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு இலங்கை கடற்படையினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
3 அல்லது 4 நாட்களில் இந்த பேச்சுவார்த்தை நடக்கும். உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள்.
இதில் மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து பேசப்படும்.
தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தவறுதலாக தாண்டினால் அவர்கள் தாக்கப்படக் கூடாது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து மீனவர்களை தாக்குவது தவறு. இதை இலங்கையிடம் பேசுவோம்.
சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்திய கடல் எல்லைக்குள் நடக்கவில்லை.
இந்திய, இலங்கை மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தெந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்துள்ளனர். இதை இந்திய இலங்கை அரசுகள் ஏற்றால், மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.
மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாமல் கண்காணிக்க கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் சைனி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications