டெல்லி காமன்வெல்த் போட்டி-உடைந்த பாலத்திற்குப் பதில் இரும்புப் பாலம்
டெல்லி: டெல்லியில், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு அருகே கட்டப்பட்ட நடை மேம்பாலம் உடைந்து விழுந்து விட்டதால், அதற்குப் பதிலாக இரும்புப் பாலத்தை கட்டும் பணியில் ராணுவம் இறங்கியுள்ளது.
காமன்வெல்த் போட்டியையொட்டி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் பார்க்கிங் பகுதியையும், ஸ்டேடியத்தையும் இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் ஒன்றை கட்டி வந்தனர். ஆனால் இந்தப் பாலம் சில நாட்களுக்கு முன்பு இரண்டாக உடைந்து விட்டது.
இதையடுத்து அவசர கதியில் இந்தப் பாலத்தை சீரமைப்பதற்கு வாய்ப்பே இல்லாததால், ராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ராணுவம் இரும்புப் பாலத்தை கட்டவுள்ளது.
இதுகுறித்து டெல்லி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சின்ஹா கூறுகையில்,
ராணுவ அலுவலகங்கள், முகாம்களில் பெய்லி பாலங்கள் அமைக்கப்படுகிறது. குறுகிய தூரத்தைக் கடப்பதற்காக இத்தகைய பாலங்கள் வேறொரு இடத்தில் தயார் செய்யப்பட்டு அப்படியே இங்கு கொண்டு வந்து பொருத்திவிடப்படும். இதற்கு பெய்லி பிரிட்ஜ் என்று பெயர்.
நேரு ஸ்டேடியத்தில் உடைந்த பாலத்துக்குப் பதிலாக இதுபோன்ற பெய்லி பிரிட்ஜ் அமைக்கப்படும். அடுத்த 5 நாள்களில் இந்த பாலத்தை ராணுவம் அமைத்துவிடும். பெய்லி பாலம் அமைக்க ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
டெல்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்தவேண்டும் என்று முதல்வர் ஷீலா தீட்சித்தை பிரதமர் கேட்டுக் கொண்டதையடுத்து, பாலத்தை அமைக்க ராணுவத்தின் உதவியைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
பாலம் அமைக்கப்படும்போது தேவையான உதவிகளை டெல்லி பொதுப்பணித்துறை வழங்கும். வாகன நிறுத்துமிடத்தையும், ஸ்டேடியத்தையும் இணைப்பதற்காக இந்த பாலம் அமையும் என்றார் சின்ஹா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications