ஜார்க்கண்ட்டில் 10 மாவோயிஸ்ட் நக்சலைட்கள் சுட்டுக் கொலை
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 10 மாவோயிஸ்ட் நக்சலைட்கள் உயிரிழந்தனர்.
இந்த அதிரடி நடவடிக்கையின்போது மாவோயிஸ்டுகளின் பல முகாம்களும் பூண்டோடு அழிக்கப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நேற்று தொடங்கி நடந்த நடவடிக்கையில் இந்த இழப்பை நக்சலைட்கள் சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து ஜார்க்கண்ட் டிஜிபி நியாஸ் அகமது கூறுகையில், குறைந்தது 10 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். சிலரது உடல்களை நாங்கள் மீட்டுள்ளோம். பல முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளன.
மாநில போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட 2000 பேர் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். சரந்தா காட்டுப் பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நக்சலைட்களைக் கண்காணிப்பதற்கும், காயமடைந்த எங்களது வீரர்களை மீட்கவும் மூன்று ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications