இனி ஆன்லைனில் பி. எட். தகுதியை பதிவு செய்யலாம் : வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் அறிவிப்பு
சென்னை: பி. எட். படிப்பை இனி ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று மாநில வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் ஆராவமுதன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பி.எட். தேர்வு எவுதி வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பில் எந்தவித வேறுபாடும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பி.ஏ., பி.எட், பி.எஸ்சி., பி.எட். முடித்தவர்களும், மாநில தொழில் மற்றும் செயல்முறை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எம்.ஏ., பி.எட், எம்.எஸ்சி., பி.எட். முடித்தவர்களும் தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்து வந்தனர். ஆனால் இனி பி. எட். தகுதியை பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம். இதனால் நேரமும், அலைச்சலும் மிச்சம். இதற்கான் ஏற்பாடுகளை வேலைவாய்ப்புத் துறை செய்துள்ளது.
இது குறித்து மாநில வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் ஆராவமுதன் கூறியதாவது,
ஆன்லைனில் பதிவு செய்ய விரும்புவோர் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்ததேதி, மாவட்டம், சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பி.எட். மதிப்பெண் சான்றிதழ் எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். பின்னர் ஆன்லைனில் உடனே தற்காலிக பதிவு மூப்பு எண் வழங்கப்படும். அதை பிரிண்ட்-அவுட் எடுத்து பி. எட். தகுதிச் சான்றிதழ் நகலையும் சேர்த்து வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். பிறகு அவர்கள் அஞ்சல் மூலம் நிரந்தர வேலைவாய்ப்பு பதிவு அட்டையை அனுப்பி வைப்பார்கள் என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
