தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டுப் போராட்டம்-ஜெ. ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கூட்டுப் போராட்டங்களில் ஈடுபட அதிமுக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
தற்போது முதலில் அதிமுக தொண்டர்களை உசுப்பேற்றி, உற்சாகத்துடன் செயல்பட வைக்கும் முயற்சியில் ஜெயலலிதா இறங்கியுள்ளார். இதற்காக முதலில் கோவையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அடுத்து திருச்சியில் நடத்தினார். இதைத் தொடர்ந்து மதுரையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போகிறார். இந்தக் கூட்டங்களில் அதிமுகவினர் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். கூட்டணிக் கட்சியினருக்கு அழைப்பு கிடையாது.
இதையடுத்து கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து கூட்டுப் போராட்டங்களை நடத்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக நேற்று கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில்,
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, நேற்று அவரது இல்லத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் என்.வரதராஜன், மற்றும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் சந்தித்துப்பேசினார்கள்.
இந்த சந்திப்பின்போது, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் இணைந்து கூட்டுப்போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications