போபால் விஷ வாயு சம்பவம்-பாதிக்கப்பட்டோருக்காக கூடுதலாக ரூ. 72 கோடி நிதி
டெல்லி: போபால் விஷ வாயு சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ. 72 கோடி இழப்பீட்டை வழங்க, போபால் சம்பவம் தொடர்பான அமைச்சர்கள் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பான அமைச்சர்கள் குழு நேற்று கூடி கூடுதல் இழப்பீடு குறித்து பரிசீலித்தது. இக்கூட்டத்தில் போபால் விஷ வாயு சம்பவ இழப்பீடு வழங்கும் பணிகள் குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் போபால் விஷ வாயு சம்பவத்திற்குப் பிந்தைய நிலை குறித்தும் ஆராயப்பட்டது.
வாரன் ஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வரும் பிரச்சினை குறித்தும் ஆராயப்பட்டது.
முன்னதாக, போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பான தீர்ப்பு வெளியானதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது. வாரன் ஆன்டர்சன் மீது ஒரு சுண்டு விரல் கூட படாமல் வழக்கை முடித்த கொடுமையை நாட்டு மக்கள் பெரும் அதிருப்தியுடன் எதிர்நோக்கினர்.
இதையடுத்து அவசரம் அவசரமாக மத்திய அரசு ப.சிதம்பரம் தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழுவை நியமித்தது. இந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு 22 பரிந்துரைகளை அளித்தது. அதில் முக்கியமானதாக ஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வர முயற்சிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், இழப்பீடு மற்றும் மறு வாழ்வு நடவடிக்கைகளுக்காக ரூ. 1265.56 கோடியை விடுவிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் நேற்று நடந்த கூட்டத்தில் கூடுதலாக ரூ. 72 கோடியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் வீரப்பமொய்லி, குலாம் நபி ஆசாத், ஜெயபால் ரெட்டி, கமல்நாத், குமாரி செல்ஜா, மு.க.அழகிரி, ஜெயராம் ரமேஷ், பிருத்விராஜ் சவான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications