தூத்துக்குடி: ஓடும் பஸ்ஸை காரில் வழிமறித்து வியாபாரிகளிடம் 8 கிலோ நகை கொள்ளை
எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ஓடும் பஸ்ஸை வழிமறித்த காரில் இருந்த கும்பல் பஸ்சில் இருந்த நகை வியாபாரிகளிடம் இருந்து 8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இதன் மதிப்பு ரூ. 1.5 கோடியாகும்.
சென்னை சவுகார்பேட்டை யானைக்கவுனி தெருவை சேர்ந்த மகேந்திர சிங் (25), ஜெகன் சிங் (31), காந்திலால் (52) ஆகியோர் ஒரு தனியார் நகைக் கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் தென் மாவட்ட நகைக் கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்ய சென்றனர். தூத்துக்குடியில் சில கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்த அவர்கள் அங்கிருந்து மதுரை செல்ல கம்பம் செல்லும் பஸ்சில் ஏறினர்.
நேற்று பிற்பகல் 3.15 மணி அளவில் அந்த பஸ் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த ஒரு கார், பஸ்சை முந்திச் சென்று, குறுக்கே நின்றது.
இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் பஸ்சுக்குள் ஏறி நகை வியாபாரிகள் வைத்திருந்த பைகளை பறித்துக் கொண்டு காரில் ஏறி தப்பிவிட்டது.
அந்த பைகளில் 8 கிலோ தங்க நகைகள் இருந்தன.
இந்தக் கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் பயணித்த நகை வியாபாரிகளே, இந்த நாடகத்தை நடத்தியிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications